News May 16, 2024

கொட்டும் மழையில் வாகனங்கள் திடீர் சோதனை

image

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு தினமும் கனிமவளங்கள் லாரிகளில் எடுத்து செல்லப்படுகின்றன. இவை அவ்வப்போது தமிழக மற்றும் கேரள போலீசாரால் சோதனை செய்யப்படுகின்றன. நேற்றும், இன்றும் இரவு புளியரை, ஆரியங்காவு பகுதிகளில் போலீசார் கனிம வள லாரிகளை கொட்டும் மழையில் சோதனை செய்தனர். அளவுக்கு அதிகமான பாரங்களை ஏற்றி வந்த லாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Similar News

News December 2, 2025

குழந்தை தொழிலாளர் பணி – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

image

தென்காசி மாவட்டத்தில் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் சட்டம், 1986-ன் படி 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை எந்தவொரு பணியிலும், 18 வயதிற்குட்பட்ட வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழில்களிலும் பணியமர்த்தக் கூடாது. அவ்வாறு பணி அமர்த்திய வேலையளிப்பவருக்கு ரூ.50,000/- வரை அபராதமும், 6 மாதங்கள் முதல் 2 வருட சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

News December 2, 2025

தோரணமலை முருகன் கோயில் கிரிவலம் தேதி அறிவிப்பு

image

தென்காசி கடையம் சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் ஒவ்வொரு மாத பௌர்ணமி தினத்தன்று கிரிவலம் நடைபெறுவது வழக்கம். கார்த்திகை மாத பௌர்ணமியொட்டி நாளை டிசம்பர் 4 ந்தேதி காலை 6 மணிக்கு கிரிவலம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை அன்னதானம் மற்றும் பிரசாதம் கோவில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட உள்ளது.

News December 2, 2025

தென்காசி: SIR 2025 – உங்க பெயர் இருக்கா CHECK பண்ணுங்க!

image

SIR விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு வருகிறது. உங்கள் பெயர் சேர்த்தாச்சான்னு தெரியலையா? அதை உங்க போன்-லே பார்க்க வழி உண்டு.
1.இங்கு <>க்ளிக்<<>> செய்து அக்கவுண்ட் உருவாக்குங்க.
2. FILL ENUMERATION -வில் மாநிலத்தை தேர்ந்தெடுத்து வாக்காளர் எண் பதிவுசெய்து சரிபாருங்க.
ஆன்லைனில் படிவம் பதிவு இல்லையெனில் உங்க பகுதி BLO அதிகாரி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்க.
இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!