News February 16, 2026
கொடை: பெற்றோரை அருவாளால் வெட்டிய மகன்

கொடைரோடு அருகே சொத்து பிரச்சனை காரணமாக பெற்றோரை மகனே அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சக்கையநாயக்கனூரை சேர்ந்த பாண்டி, மீனாட்சி தம்பதியினரை, அவர்களது மகன் சுருளி (45) அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று இரவு ஏற்பட்ட மோதலில் இருவரையும் அவர் அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சுருளியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
திண்டுக்கல்: உங்க பெயரில் நிலம் இருக்கா? செக் பண்ணுங்க!

திண்டுக்கல் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <
News March 11, 2026
திண்டுக்கல்: Spam Calls தொல்லையா? இனி END CARD!

திண்டுக்கல் மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, ‘START 0’ என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க!
News March 11, 2026
வத்தலக்குண்டு: தட்டித்தூக்கிய அதிமுக Ex அமைச்சர்!

வத்தலக்குண்டு மற்றும் பட்டிவீரன்பட்டி பகுதிகளை சேர்ந்த ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான ரத்தினம், முத்துச்சாமி, மணிப்பிள்ளை, ஓ.இளங்கோவன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் தலைமையில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், அதிமுக துணைப் பொதுச்செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா. விஸ்வநாதன் முன்னிலையில் அவர்கள் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.


