News April 6, 2025
கொடை: சுற்றுலா பஸ் கவிழ்ந்து 13 பேர் படுகாயம்

கொடைக்கானல் – வத்தலகுண்டு கெங்குவார்பட்டி அருகே கொடைக்கானலில் இருந்து கேரளாவிற்கு சுற்றுலா சென்ற டூரிஸ்ட் பஸ் நேற்று(ஏப்.5) சனிக்கிழமை அதிகாலை, 3:30 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்து மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கொடைக்கானல் மற்றும் பெருமாள் மலையைச் சேர்ந்த ஆறுமுகம், (43), எட்வின்(42) உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி போலீசார் தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News July 5, 2025
ஏவல், பில்லி சூனியம் நீக்கும் திண்டுக்கல் கோயில்!

திண்டுக்கல், வேடசந்தூரில் அழகிய நாகம்மன் கோயில் உள்ளது. இங்குள்ள மக்களுக்கு வேண்டிய வரம் தந்து காத்து அருள்கிறாள் நாகம்மன். சுமார் 400 ஆண்டுகள் முன்பு கோயில் தோன்றியது. ஏவல், பில்லி சூனியங்களை நீக்கும் உன்னத தெய்வமாக நாகம்மன் உள்ளார். கோயிலின் தல விருட்சமாக வேம்பும், அரசும் உள்ளது. தல விருட்சத்தை சுற்றிவந்து மாங்கல்யம் கட்டி தொங்க விட்டால் திருமணத்தடை விலகும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
News July 5, 2025
திண்டுக்கல்: ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் பெருமாள்கோவில்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளியில், காலியாக உள்ள ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு, தற்காலிக தொகுப்பூதியத்தில் பணிபுரிய, உரிய கல்விச் சான்றுகளுடன், விண்ணப்பங்களை திண்டுக்கல் ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரடியாகவோ (அ) தபால் மூலமாகவோ வரும் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!
News July 5, 2025
திண்டுக்கல்: 4,6,6,6,6,6 விளாசிய விமல்!

திண்டுக்கல்: நத்தம் பகுதியில் நேற்று(ஜூலை 4) இரவு நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சென்னை அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் திண்டுக்கல் அணி சென்னை அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேலும் இந்த போட்டியில் சென்னை டிராகன்ஸ் வீரர் விமல் குமார் போட்டியின் 17ஆவது ஓவரில் 4,6,6,6,6,6 என 34 ரன்கள் விலாசி சாதனை படைத்தார்.