News August 18, 2024
கொடைக்கானல்: போதை காளான் விற்ற 3 பேர் கைது

திண்டுக்கல்: கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு மதுமதி தலைமையில் போலீசார் நேற்று கொடைக்கானல் நகரப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கேரளா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த கல்லூரி மாணவர்களிடம் 3 பேர் போதை காளான்களை காட்டி பேசிக்கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவர்கள் 3 போரையும் மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர்.
Similar News
News October 20, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை ரோந்து விவரம்

திண்டுக்கல், நேற்று (அக்டோபர் 19) இரவு 10 மணி முதல் இன்று (அக்டோபர் 20) காலை 6 மணி வரை, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரி ரோந்து பணியில் ஈடுபட உள்ளார். திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் கீழ்காணும் காவல் துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
News October 19, 2025
திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இன்று (அக் 19, ஞாயிறு) குறுஞ்செய்தி மூலம் பொதுமக்களுக்கு பண்டிகை காலத்தில் கடைவீதிகளில் பொருட்கள் வாங்கும் போது நகைகள் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்து உஷாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பொதுமகர்கள் ஜாக்கிரதை இருக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டது.
News October 19, 2025
திண்டுக்கல்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை.நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987-94987 மற்றும் 1912 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!