News May 17, 2024
கொடைக்கானலில் தொடங்கியது மலர் கண்காட்சி

கொடைக்கானலில் தோட்டக்கலை துறை, சுற்றுலாத்துறை சார்பில் 61வது மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் இன்று தொடங்கியது. இந் நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்கள் கொண்டு வரப்பட்டது. இதில் மலர்களால் ஆன மயில், கார்ட்டூன் சேவல் மற்றும் டெடி பியர், போன்றவைகள் பூக்களினால் தத்ரூபமாக அமைக்கப்பட்டது. இதைக் காண சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
Similar News
News July 11, 2025
திண்டுக்கல் :சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

திண்டுக்கல்: சாணார்பட்டி பகுதியைச் சேர்ந்த சிறுமியை ஆசை வார்த்தை கூறி, அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தற்போது அச்சிறுமி கப்பமாகவுள்ளார். இதையடுத்து போலீசார் விசாரித்ததில், சம்பவத்தில் ஈடுபட்டதாக திண்டுக்கல், A.வெள்ளோடு பகுதியை சேர்ந்த சுதன்ராஜ்(40) என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News July 10, 2025
திண்டுக்கல்:12th முடித்தால் கிராம வங்கியில் வேலை

தமிழகத்தில் NABARD வங்கியின் நிதிச் சேவை நிறுவனத்தில்( NABFINS) CSO( Customer Servive Officer) பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை, 12ஆவது படித்திருந்தாலே போதுமானது. 18 – 33 வயதுக்குட்பட்டவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30ஆம் தேதியே கடைசி நாள். மேலும் விவரங்கள், விண்ணப்பிக்கும் முறையை தெரிந்துகொள்ள<<17020685>> இங்கே கிளிக்.<<>> (SHARE IT)
News July 10, 2025
கிராம வங்கி வேலைக்கு எப்படி விண்ணப்பிக்கலாம்?

▶️NABARD வங்கியின் CSO பணிக்கு உங்களிடம் டூவீலர் இருப்பது அவசியம்.
▶️வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பது, சிறந்த வாடிக்கையாளர்களை வங்கியில் இணைப்பது, அவர்களிடமிருந்து வட்டி வசூலிப்பது போன்றவைகளே இப்பணியாகும்.
▶️நேர்முகத் தேர்வு மூலமே இப்பணிக்கான ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
இதற்கு ஆனலைனில் விண்ணப்பிக்க careers@nabfins.org எனும் இணைய முகவரி(அ) 7708107231-ஐ அணுகலாம். உடனே SHARE