News April 28, 2025

கொசஸ்தலை ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

image

கனக்கம்மாச்சத்திரம் அடுத்த இலுப்பூர் கிராமத்தில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் குளிக்க சென்ற உள்ளியம்பாக்கம் பகுதியைச் சார்ந்த அரிபாபு என்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கனக்கம்மாச்சத்திரம் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடற்கூர் ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Similar News

News November 2, 2025

திருவள்ளூரில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருவள்ளூர் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த லிங்கில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த <>இணையத்தளத்தில்<<>> LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

News November 2, 2025

திருவள்ளூர்: பெற்றோரை இழந்த சோகத்தில் பெண் தற்கொலை!

image

திருவள்ளூர் அருகே நயப்பாக்கம் சேர்ந்த அருண்குமார் (23) இவரின் தாய் தந்தை இருவரும் இவரின் சிறுவயதிலேயே உயிரிழந்தானர். இதனால் அருண்குமாரும் தங்கை பாரதியும் பாட்டியின் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் இல்லாத ஏக்கத்தில் இருந்து வந்த பாரதி 40 தூக்க மாத்திரைகளை உட்கொண்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 2, 2025

திருவள்ளூர்: கோயில் குளத்தில் மூழ்கிய சிறுவர்கள் பலி

image

திருவேற்காடு, அயனம்பாக்கம், பொன்னியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி. பெயிண்டராக உள்ளார். இவருக்கு ரியாஸ் (5), ரிஸ்வான் (3) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று சிறுவர்களின் பெற்றோர்கள் வேலைக்கு சென்ற நிலையில், சிறுவர்கள் இருவரும் வீட்டின் அருகே உள்ள குளத்தில் விளையாட சென்றுள்ளனர். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!