News April 19, 2025

கைவினைத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி வைக்கிறார். குன்றத்தூரில் நடைபெறும் இந்த விழாவில் கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கிறார். மேலும், 8,951 கைவினைத் தொழில் முனைவோருக்கு ரூ.170 கோடி கடன் மற்றும் ரூ.34 கோடி மானியம் வழங்கப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. சிறிது நேரத்தில் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.

Similar News

News November 2, 2025

காஞ்சி: த.வெ.க to பா.ஜ.க-கட்சி மாறிய இளைஞர்கள்!

image

காஞ்சி, அவலூரில் TVK முன்னாள் ஒன்றிய தலைவர் R.ஜெகன் தலைமையில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை த.வெ.க-விலிருந்து விலகி பாஜக ஒன்றிய தலைவர் சாட்டை கே.பிரபாகரன் முன்னிலையில் நேற்று பா.ஜ.க-வில் இணைத்து கொண்டனர். இதில் ஒன்றிய பொதுசெயலாளர் குணா பாரதி & ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் இ.நந்தகோபால், கிளை தலைவர் செல்வகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 2, 2025

காஞ்சி மாணவர் அசத்தல்!

image

காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி கிராமத்தை சேர்ந்த டாக்டர் ஏ.பி.ஜே. கலாம் விளையாட்டு அறக்கட்டளை சார்பில், தனியார் பள்ளி மாநில தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், கோவிந்தவாடி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.லோகநாதன் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். இவருக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

News November 2, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ. 01) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!