News August 6, 2024
கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன்

சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று ‘முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல் கையெழுத்து இயக்கத்தை, தூத்துக்குடியைச் சேர்ந்த சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறையின் அமைச்சரான கீதாஜீவன் இன்று துவக்கி வைத்தார்.
Similar News
News December 24, 2025
தூத்துக்குடி: அரசு பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலா?

தூத்துக்குடி மக்களே, அரசு பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம். இங்கு <
News December 24, 2025
தூத்துக்குடி: சிறுமிக்கு பாலியல் தொல்லை – இளைஞர் கைது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (21). இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையப் போலீசார் வழக்குப் பதிந்து அரவிந்தை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News December 24, 2025
தூத்துக்குடி போலீசாருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது

தாளமுத்து நகர் எஸ்ஐ முத்துராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சந்தேகத்துக்கிடமான 4 பேர் கொண்ட கும்பல் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுத்த விக்னேஷ், முத்து கணேஷ், கண்ணன், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


