News April 14, 2024
கையாடல் செய்த வங்கி மேலாளர் சிறையிலடைப்பு

சாத்தரசன்கோட்டையைச் சேர்ந்த கலைச்செல்வி கடந்த மார்ச்மாதம் அவரது கணவரின் ஆயுள்காப்பீட்டுத் தொகை ரூ.1,00,000 EASF Small Finance வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டதாக புகார் கொடுத்திருந்தார். இதுகுறித்த போலீசார் விசாரணையில் மானாமதுரையில் உள்ள EASF Small Finance வங்கியின் கிளை மேலாளர் முத்துகுமாருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்ததன் அடிப்படையில் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 5, 2025
சிவகங்கை மாவட்ட ரயில் பயணிகளின் கவனத்திற்கு

சிவகங்கை: மானாமதுரை, காரைக்குடி வழியாக இயங்கும் வண்டி எண். 16751 சென்னை எழும்பூர்-இராமேஸ்வரம் விரைவு வண்டி (Boat Mail), மற்றும் வண்டி எண்.22661 எழும்பூர்-இராமேஸ்வரம் சேது அதிவிரைவு வண்டி ஆகியவை தற்காலிகமாக நாளை முதல், டிசம்-15 வரை தாம்பரம் வரை இயங்கும், எழும்பூர் செல்லாது. சிவகங்கை மாவட்ட பயணிகள் இதற்கு தகுந்தமாதிரி பயணத்தை அமைத்து கொள்ளலாம் என தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது.
News December 5, 2025
சிவகங்கை: சிறுமிக்கு பாலியல் தொல்லை; 20 ஆண்டுகள் சிறை

மதுரையை சேர்ந்த கட்டிட தொழிலாளி குமார் (எ) ராஜ்குமார் (35),மானாமதுரை சேர்ந்த 17வயது சிறுமியை கடத்தி சென்று கொடைக்கானலில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 3 நாட்களுக்கு பிறகு போலீசார் சிறுமியை மீட்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றவாளி குமார் (எ) ராஜ்குமாருக்கு 20ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ₹3,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்
News December 5, 2025
சிவகங்கையில் தமிழக ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் நகரின் அரண்மனை வாசல் பகுதியில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது திராவிடர் கழக சிவகங்கை மாவட்டக் காப்பாளர் மூத்த வழக்கறிஞர் இன்பலாதன் தலைமையிலும் மாவட்ட செயலாளர் பெ. ரு.இராசாராம் முன்னிலையிலும் நடைபெற்றது…
சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புகழேந்தி அனைவரையும் வரவேற்று வரவேற்புரையாற்றினார்…


