News June 26, 2024
கைதியிடம் லஞ்சம் பெற்ற காவலர் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறையில் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். சிறைக்குள் கஞ்சா, போதைப் பொருட்களை பயன்படுத்த கைதிகளிடம் சிறை காவலர்கள் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது. விசாரணையில்,செல்வகுமார் என்ற கைதிக்கு கஞ்சா விநியோகிக்க அவரது நண்பரிடம் சிறைக் காவலர் முகமது ஆசிப் ரூ.5ஆயிரம் லஞ்சம் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, முகமது ஆசிப்பை பணியிடை நீக்கம் செய்து சிறைக்கண்காணிப்பாளர் சதீஷ்குமார் உத்தரவிட்டார்.
Similar News
News November 10, 2025
மதுரை: வாக்காளர் பட்டியல் விபரங்கள் வெளியீடு!

மதுரை மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <
News November 10, 2025
மதுரை: சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

மதுரை செல்லூர் இமாம் உசேன் மகன் ராஜா முகம்மது இவரது உறவுக்கார சிறுமி வீட்டிற்கு சிறு வேலைகள் செய்ய வந்த போது ராஜா முகம்மது சிறுமியிடம் நெருக்கமாக பழகியதால் சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதுக்குறித்து சிறுமி பாட்டியிடம் தகவல் தெரிவித்தார். சிறுமியை அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. மகளிர் போலீசார் ராஜா முகம்மது மீது போக்சோ வழக்கு பதிவு செய்தனர்.
News November 10, 2025
மதுரையில் 11ம் வகுப்பு மாணவி தற்கொலை

கூடல்புதூர் கோசாகுளத்தை சேர்ந்தவர் கார்த்திக் மகள் பேபி ஐஸ்வர்யா(16). இவர் மதுரை நகரில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். எந்த நேரமும் இவர் வீட்டில் செல்போன் பார்த்து கொண்டிருந்ததை அவரது தாய் கண்டித்தால் மனமுடைந்து தனது பெட்ரூமில் இன்று மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து
கொண்டார். கூடல்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


