News March 31, 2024

கோயிலில் மலைபோல் குவிந்த விறகுகள்

image

அந்தியூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்திரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்.3ஆம் தேதி நடைபெறுகிறது. அதில் குண்டம் இறங்குவதற்கு பக்தர்கள் தினம் தோறும் விறகுகளை காணிக்கையாக வழங்கி வருகின்றனர். அவை கோவில் முன்பு மலை போல் குவிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு 60 அடி நீளத்திற்கு குண்டம் தயார் செய்யப்படும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்குவர் .

Similar News

News April 20, 2025

தாளவாடி: லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் சஸ்பெண்ட்

image

தாளவாடி அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில் என்பவரிடம் மின்வாரிய ஊழியர் மணிகண்டன் ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. வீடியோ குறித்து மின்வாரிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் வயர்மேன் மணிகண்டன் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக  தாளவாடி மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

News April 20, 2025

ஈரோடு: ஓய்வூதியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு, நலவாரியங்களில் பதிவு பெற்ற 60வயது நிறைவடைந்த 11,000 மேற்பட்டோர் ஓய்வூதியம் பெறுகின்றனர். இவர்கள் தங்கள் ஆயுள் சான்றை, உரிய ஆவணங்களை பதிவேற்றி இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். 2025-26-ஆம் ஆண்டுக்காக ஆண்டு ஆயுள் சான்றை இந்த <>லிங்க்<<>> மூலம், உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்தார்.

News April 20, 2025

திருமண தடை நீக்கும் சொர்ணலக்ஷ்மி நரசிம்மர்

image

ஈரோடு, கோனார்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக சொர்ணலக்ஷ்மி நரசிம்மர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை, நில பிரச்சனை, கல்வியில் ஆற்றல் குறைவு,தொழில் மந்தம் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!