News March 24, 2025
கேலோ இந்தியா போட்டியில் அசத்திய தூத்துக்குடி தங்கங்கள்!

டெல்லியில் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான கேலோ இந்தியா தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சோலை ராஜ் நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும், முத்து மீனா T-20 பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கும் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் அவர்கள் பெருமை சேர்த்துள்ளனர்.
Similar News
News November 28, 2025
தூத்துக்குடியில் இனி 3 வேலை இலவச உணவு

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் 1702 தூய்மை பணியாளர்களுக்கு 26 இடங்களில் 3 வேலை இலவச உணவு வழங்குவதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
News November 28, 2025
கள அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று முதல் நாளை பிற்பகல் வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து கள அலுவலர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் நீர் நிலைகளில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
தூத்துக்குடி: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

தூத்துக்குடி மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


