News April 23, 2025
கேரளாவில் நடைபெற்ற கூட்டத்தில் இராமநாதபுரம் எம்பி

வெளியுறவுத்துறை நாடாளுமன்ற நிலைக்குழு சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக கேரளா மாநிலத்தில் நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது கொச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் RPO மற்றும் பாஸ்போர்ட் சேவை மையம் PSK உள்ளிட்டவைகளை நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டனர். இதில், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர் நவாஸ்கனி கலந்து கொண்டார்.
Similar News
News November 25, 2025
ராமநாதபுரம் அருகே விபத்து வாலிபர் படுகாயம்

கீழக்கரை முக்கு ரோட்டில் நேற்று (நவ24) பஸ்ஸில் முன்பக்கத்தில் இருந்து இறங்கியதாகவும் தடுமாறி கீழே விழுந்ததில் விபத்து ஏற்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அடிபட்டவரின் பற்றிய விவரங்கள் எதுவும் தெரியவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட நபர் ஆம்புலன்ஸ் மூலமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
News November 25, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

இன்று (நவ.24) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
News November 24, 2025
ராமநாதபுரம் மாவட்டத்தில் 662 மி.மீ மழை பதிவு

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இன்று(நவ.24) காலை 6 மணி நிலவரப்படி தொண்டி 87.4 மிமீ, ஆர் எஸ் மங்கலம் 77.5 கமுதி 66.2 மிமீ, திருவாடானை 58.4 மிமீ, தானம் 54.7 மிமீ, கடலாடி 51 மிமீ, பரமக்குடி 47.4, ராமநாதபுரம் மிமீ மற்றும் இதர பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 662 மிமீ மழை பெய்துள்ளது. தொடர் மழை காரணமாக படகுகள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


