News March 19, 2025
கேரளாவில் இருந்து குமரியில் விடப்பட்ட வெறி நாய்கள்

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் இருந்து 20க்கும் மேற்பட்ட வெறி நாய்களை கடையாலுமூடு பேரூராட்சிக்கு உட்பட்ட நெட்டா சோதனை சாவடி வழியாக தமிழ்நாடு எல்லை பகுதியான அரகநாடு கட்டச்சல் பகுதியில் விட்டபோது வாகனத்தை பொதுமக்கள் விரட்டி சென்று சிறைபிடித்தனர். ஒரு சில நாய்கள் தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News March 20, 2025
குமரி அனந்தன் பிறந்தநாளை கொண்டாடிய தமிழிசை!

குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி அனந்தன் தனது 93வது பிறந்த நாளை நேற்று(மார்ச் 19) கொண்டாடினார். உடல் நலம் சரியில்லாமல் சென்னையில் மருத்துவமனையில் குமரி அனந்தன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது மகளும் பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று அவரை சந்தித்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினார்.
News March 20, 2025
10th Exam: கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஒதுக்கீடு

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இம்மாதம் 28ஆம் தேதி தொடங்குகிறது. இதனை ஒட்டி தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியிடங்கள் குலுக்கல் முறையில் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் கிரிஸ்டல் ஜாய் லெட் தலைமையில் இது நடைபெற்றது. பொதுத்தேர்வு தொடர்பான அறிவுரைகளை முறையாக கண்காணிப்பாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
News March 20, 2025
வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகள் வராமல் தடுக்கும் வழிகள்!

குமரி மக்களே, வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தப்பிக்க,★ லோசான அடைகளை அணிவது நல்லது.★ டீ,காபி, மது வகைகளை தவிர்ப்பது நல்லது.★ தினமும் 2 நேரம் குளிப்பது நல்லது.★ எலுமிச்சைசாறு, நொங்கு, மோர் போன்ற இயற்கை பானங்களை பருகலாம்.★ பகலில் வெயிலில் அதிகம் போகாமல் நிழலான காற்றோட்டமான இடத்தில் இருத்தல் வேண்டும்.