News March 29, 2025

கேன் வாட்டர் குடிப்பவர்கள் கவனத்திற்கு

image

கோடை காலம் முன்னரே கோவை மாவட்டத்தில் குடிநீர் கேன்கள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் குடிநீர் கேன்களை அதிகமுறை பயன்படுத்தும் போது அதில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் தண்ணீரில் கலந்துவிடும் அபாயம் உள்ளது. எனவே, ஒரு குடிநீர் கேனில் 30 முறை மட்டுமே மறுசுழற்சி செய்து குடிநீரை நிரப்பவேண்டும் என மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். (Share பண்ணுங்க)

Similar News

News April 3, 2025

BREAKING: மருதமலையில் வெள்ளி வேல் திருட்டு

image

கோவை மாவட்த்தில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் வேல் கோட்டம் தியான மண்டபத்தில் சாமியார் வேடத்தில் வந்த நபர் வேலை திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு நாளை(ஏப்.3) கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதை ஒட்டி பலத்த பாதுகாப்பையும் மீறி பட்டப் பகலில் திருடப்பட்ட சம்பவம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

News April 3, 2025

சக்தி கலசங்களை வழிபாடு செய்ய பக்தர்களுக்கு அழைப்பு

image

கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை (04-04-2025) நடைபெற உள்ளது. முன்னதாக, இன்று (03-04-2025) திருக்கோவிலில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார சன்னதிகளில் உள்ள சக்தி கலசங்களை, யாகசாலையில் வைத்து பூஜை செய்ய இருப்பதால், பக்தர்கள் யாகசாலையில் அமைந்துள்ள மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களை, இன்று மாலை வரை தரிசனம் செய்யலாம் எனப்பட்டுள்ளது.

News April 3, 2025

கோவையில் போக்குவரத்து மாற்றம்

image

கோவை மருதமலைகோவில் திருக்குட விழா நாளை (ஏப்.4) தேதி நடைபெற இருப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. அதில் மருதமலை வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வடவள்ளி, தொண்டாமுத்தூர் சந்திப்பு வழியாக, மகாராணி அவென்யூ, மருதமலை ரோடு சந்திப்பை அடைந்து, இடது புறம் திரும்பி, பாரதியார் பல்கலைக் கழகம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!