News January 1, 2025
கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடிய மாவட்ட எஸ்.பி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் 2025 ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கேக் வெட்டி காவல்துறையினர் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி புத்தாண்டை வரவேற்று கொண்டாடினார். இதில் ஏராளமான காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
Similar News
News October 15, 2025
திருப்பத்தூர்: வீட்டில் இருந்த வாகனத்திற்கு தீ!

ஆம்பூர் அடுத்த பெரியமலையாம்பட்டு பகுதியை சேர்ந்த மஞ்சு என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நேற்று (அக்.14) இரவு தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்துள்ளார். நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் மஞ்சுவின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
News October 15, 2025
திருப்பத்தூர்: +2 போதும், நல்ல வேலை!

திருப்பத்தூர் மக்களே, இந்திய ராணுவத்தில் Group-C பிரிவில் காலியாக உள்ள Electrician, Telecom Mechanic போன்ற பதவிகளில் 194 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 12th பாஸ் போதும். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.20,200 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்க் <
News October 15, 2025
திருப்பத்தூரில் மழை வெளுக்கும்

திருப்பத்தூர் மாவட்டடத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை இன்னும் 2 நாட்களில் தொடங்கவுள்ள நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், அண்டை மாவட்டங்களிலும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியே செல்வோர் முன்னெச்சரிக்கையா இருங்க. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.