News March 27, 2025
கூலி தொழிலாளி தவறி விழுந்து பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி வாணியம்பாடி பட்டி பகுதியில் இன்று ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் பிரபாகரன் என்ற கூலி தொழிலாளி சுண்ணாம் அடித்து கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்த பிரபாகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து குடியாத்தம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News November 15, 2025
வேலுர்: SIM CARD வைத்திருப்போர் இதை தெரிஞ்சுக்கோங்க!

இந்தியாவில் ஒருவர் 9 சிம் கார்டுகள் மட்டுமே வைத்திருக்க முடியும். எனவே, உங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க, இந்த லிங்கில் உங்கள் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் உள்நுழையலாம். உங்கள் பெயரில் உள்ள அனைத்து எண்களின் பட்டியலும் காட்டப்படும். அடையாளம் தெரியாத எண்கள் இருந்தால் உடனடியாகப் புகார் செய்து பிளாக் செய்யலாம். ஷேர் பண்ணுங்க!
News November 15, 2025
வேலூர்: நகைக்கடையில் கைவரிசை – 3 ஆண்டுகள் சிறை!

வேலூர்: தோட்டப்பாளையத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் நகை வாங்குவது போல் நடித்து 5 பவுன் வளையல்களை திருடி சென்ற விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த பானுமதி (39), அமராவதி (48) ஆகியோரை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து நகையை மீட்டனர். இந்த வழக்கின் விசாரணை நேற்று (நவ.15) ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்தது. இதில் பானுமதி, அமராவதி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
வேலூர்: போக்சோ வழக்கு – கோர்ட் அதிரடி தீர்ப்பு!

வேலூர்: கடந்த 2018ம் ஆண்டு வேலூர் வடக்கு போலீஸாரால் முஸ்கான் என்பவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு நேற்று (நவ.14) வேலூர் போக்சோ விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு முஸ்கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.


