News December 4, 2024
கூலித் தொழிலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது

ஸ்ரீவி சந்தைப்பேட்டை தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்(45). கூலி தொழிலாளியான இவர் அப்பகுதியில் உள்ள தெருவில் நவ.28 ஆம் தேதி படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் (56) என்பவரை கைது செய்து அவரது வீட்டில் இருந்து ரூ.12 லட்சத்தை கைப்பற்றினர்.
Similar News
News November 24, 2025
விருதுநகர்: அரசுப்பள்ளி கட்டிட மேற்கூரை பெயர்ந்து சேதம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட புல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் காரியாபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் பள்ளியின் கான்கிரீட் மேற்கூரை தொடர்மழையால் இடிந்து விழுந்ததால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இன்று பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
News November 24, 2025
விருதுநகர் அருகே மின்வேலி அமைத்த நபர் கைது!

தொப்பலாக்கரையில் நேற்று விவசாய தோட்டத்தில் காட்டுப்பன்றிகளுக்காக சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி அதே கிராமத்தைச் சேர்ந்த மாரிச்சாமி என்ற விவசாயி உயிரிழந்தார். தோட்டத்திற்கு உரம் போடச் சென்றபோது அருகிலுள்ள தங்கப்பாண்டியன் தோட்டத்தில் இருந்த மின் வேலியில் சிக்கி மாரிச்சாமி பலியான நிலையில் பரளச்சி போலீசார் தங்கப்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில் அவரை கைது செய்தனர்.
News November 24, 2025
விருதுநகர்: நவ.28-க்குள் விண்ணப்பிக்கவும் – ஆட்சியர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டுச் சங்கம் மூலம் 2024-2025-ஆம் ஆண்டில் சிறந்த எழுத்தாளர்களுக்கான உதவித்தொகையினை பெற தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. மேலும் ஆர்வமுள்ளவர்கள் tn.gov.in என்ற இணைய தளம் மூலம் நவ.28 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.


