News March 7, 2025
கூலித் தொழிலாளியை கொலை செய்த இருவர் கைது

உத்திரமேரூர் அருகே உள்ள கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (47). கூலித் தொழிலாளியான இவரை, நேற்று முன்தினம் (மார்.5) உத்திரமேரூர் போலீசார் கருவேப்பம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கிணற்றில் சடலமாக மீட்டனர். இந்த வழக்கில், முன்விரோதம் காரணமாக பழனியை கொலை செய்த, கருவேப்பம்பூண்டியைச் சேர்ந்த அகத்தியன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை உத்திரமேரூர் போலீசார் நேற்று (மார்.6) கைது செய்தனர்.
Similar News
News April 21, 2025
ஒரகடம் அருகே லாரி மோதி இளைஞர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த குணசேகரன் (23) ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.இவர், நேற்று முன்தினம் (ஏப்ரல் 19) இரவு பைக்கில் ஒரகடத்தில் இருந்து வல்லம் பகுதிக்கு சென்றார். அப்போது, ஒரகடம் துணை மின் நிலைய சந்திப்பில் லாரி ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதமாக உயிரிழந்தார்.
News April 20, 2025
காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

உத்திரமேரூரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கருவேப்பம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூன் (21) என்பவர் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்ததை கண்டனர். விசாரணையில் அவர் சட்டவிரோதமாக 1.2 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. உடனே போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்து, அர்ஜுனை கைது செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
News April 20, 2025
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி

குன்றத்தூரில், நேற்று (ஏப்ரல் 19) கலைஞர் கைவினைத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அவர் அளித்த 5 அறிக்கைகளில், “காக்களூர் உற்பத்தியாளர்கள் தொழிற்பேட்டையில், ரூ.3.90 கோடியில் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி மையம் ஏற்படுத்தப்படும். சிறு, குறு தொழில் நிறுவனங்கள், உள்நாட்டில் வர்த்தக கண்காட்சிகளில் பங்கேற்க நிதியுதவி ரூ.1-லிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என்றார்.