News May 10, 2024

கூலித் தொழிலாளியின் மகள் சாதனை!

image

எர்ணாவூர், எரணீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்த சந்திரசேகர், வளர்மதி தம்பதியரின் மகள் ஸ்வேதா. திருவான்மியூரில் உள்ள தி பெசன்ட் தியாசா  பிக்கல் மேல்நிலைப் பள்ளியில் 10 வகுப்பு பயின்று வந்தார். இந்நிலையில் இவர், நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் 494 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றுள்ளார். தமிழில் 96, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 99 எடுத்துள்ளார். 

Similar News

News November 23, 2025

சென்னையில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகள்

image

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நடப்பாண்டில் நாணயங்களை விழுங்கிய 110 குழந்தைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு பட்டன், பேட்டரி போன்ற சிறிய பொருள்கள் விளையாட வழங்கக் கூடாது. அவை எளி–தில் சுவாசப் பாதைக்குள் சிக்கிக் கொள்ளக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

News November 23, 2025

சென்னை: ரயிலில் விடப்பட்ட பச்சிளம் குழந்தை

image

கேரள மாநிலம் ஆழப்புழாவில் இருந்து சென்னைக்கு இன்று(நவ.22) அதிகாலை வந்த விரைவு ரயிலில் 10 மாத பெண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. பயணி ஒருவர் குழந்தையை கண்டெடுத்து டிக்கெட் பரிசோதகரிடம் தெரிவிக்க, பின்னர் அரசு குழந்தைகள் நலக் குழுமத்திடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 23, 2025

சென்னை: உடல் நசுங்கி கொடூர பலி!

image

சென்னை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனர் அப்துல் வாஹித் (38). நேற்று(நவ.22) இவர் ஆட்டோவில் பள்ளி மாணவி ஒருவரை சவாரியாக ஏற்றிக் கொண்டு கீழ்ப்பாக்கம் – மேடவாக்கம் டேங்க் சாலையில் சென்று கொண்டிருந்தார். கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் வளாகத்தின் உள்ளே பனைமரம் தானாக ஆட்டோவின் முன்பகுதி மேல் விழுந்ததில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

error: Content is protected !!