News October 18, 2024
கூட்டு பாலியல் வழக்கில் கவுன்சிலருக்கு நீதிமன்ற காவல்
பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அதிமுக நிர்வாகியும்,நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் சிகாமணிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ஐகோர்ட் ரத்து செய்த நிலையில், நேற்று ஸ்ரீவி. நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து சிகாமணியை அக்.25 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Similar News
News November 20, 2024
விருதுநகரில் மழை தொடரும்!
விருதுநகர் உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
News November 20, 2024
விடுமுறை: பள்ளி தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்யலாம்!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் தொடர் மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் ஆங்காங்கே பரவலாக மிதமான மழை பெய்துள்ளதால் இன்று(நவ.20) பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து சூழலுக்கு ஏற்ப அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
வரதட்சணை கொடுமை செய்த 8 பேர் மீது வழக்கு
சிவகாசி டி. மானகசேரியை சேர்ந்தவர் மாரிராஜ் சர்க்கரைத்தாய் தம்பதி. திருமணத்தின் போது 30 பவுன் நகை வரதட்சணையாக சர்க்கரைதாய் வீட்டினர் வழங்கிய நிலையில் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் மாரிராஜ், அவரது பெற்றோர், சகோதரர்கள் உள்ளிட்டோர் கொடுமை செய்துள்ளனர். மனஉளைச்சலடைந்த சர்க்கரைத்தாய் சிவகாசி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கணவர் மாரிராஜ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.