News June 26, 2024

கூட்டுறவு மேலாண்மை இரண்டாம் பருவ இறுதித் தேர்வு

image

திருவண்ணாமலையில் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், 2023-2024 ஆம் கல்வியாண்டுக்கான பயிற்சியாளர்களுக்கான இரண்டாம் பருவ இறுதித் தேர்வு திங்கள்கிழமை தொடங்கியது.தொடர்ந்து ஜூன் 28-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தத் தேர்வை 104 பயிற்சியாளர்கள் எழுதுகின்றனர்.

Similar News

News November 24, 2025

தி.மலையில் இது கட்டாயம்; ஆட்சியர் போட்ட உத்தரவு!

image

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அன்னதானம் வழங்குமா? உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு பெற்று அன்னதானம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில், அன்னதானம் வழங்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

News November 23, 2025

அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழா கொடியேற்றம்

image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நாளை (நவ.24) காலை 6.00 முதல் 7.15 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதையொட்டி, பாதுகாப்பு போக்குவரத்து ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

News November 23, 2025

தி.மலை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (நவ.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!