News April 10, 2025
கூட்டுறவு பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் 2024-2025 ம் ஆண்டிற்கான 24வது அஞ்சல் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது விபரங்களுக்கு WWW.tncu.gov.tn.in என்ற இணையதளத்தின் மூலமும் நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம் என்ற முகவரியிலோ 04286-290908, 9080838008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்
Similar News
News December 24, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (24.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 24, 2025
நாமக்கல்லில் உச்சம் தான்! மாற்றமே கிடையாது!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆக நீடித்து வந்தது. இந்த நிலையில் இன்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 6.40- ஆகவே நீடிக்கின்றது. வடமாநிலங்களில் நிலவும் கடுமையான குளிரின் காரணமாக, முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. எனவே முட்டை உச்ச விலையில் நீடித்து வருகின்றது.
News December 24, 2025
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடைகளுக்கான 8-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப் பணி, வரும் 2025 டிசம்பர் 29 முதல் 21 நாட்களுக்கு நடைபெற உள்ளது. மொத்தம் 2,80,600 கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் வகையில் 105 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.


