News September 27, 2024

கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

image

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம், கிராமத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் அமைப்பதற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் இன்று(27.09.2024) சங்கத் தலைவரிடம் வழங்கினார். மாவட்டம் முழுவதும் உள்ள 152 வருவாய் கிராமங்களிலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்ததக்கது.

Similar News

News December 21, 2025

பெரம்பலூர்: கிரைண்டர் வாங்க பணம் வேண்டுமா?

image

தமிழக அரசு சார்பில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களை முன்னேற்றும் வகையில் கிரைண்டர் வாங்க மானியம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மொத்த விலையில் 50% அல்லது அதிகபட்சமாக ரூ.5,000 மானியமாக வழங்கப்படும். இதற்கு 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வருமானச் சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.SHARE

News December 21, 2025

பெரம்பலூரில் இப்படி ஒரு சரணாலயமா!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கரைவேட்டி பறவைகள் சரணாலயம் மிகச் சிறந்த சரணாலயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த சரணாலயத்தில் சுமார் 90 அரிய வகை நீர்ப் பறவைகள் உட்பட 188 அரிய வகை பறவைகள் வந்து தங்கியுள்ளன. இங்கு ஜனவரி மாதத்தில் சுமார் 50 ஆயிரம் பறவைகள் நிறைந்திருக்குமாம். இந்த சரணாலயத்தில், சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இலவசம். மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்!

News December 21, 2025

பெரம்பலூர்: பேருந்து மீது மோதிய லாரி

image

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே சென்னையில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்தினால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

error: Content is protected !!