News October 23, 2024
கூட்டணிக் கட்சிகள் தேனீக்களாய் வரும்!

“அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க தேசிய கட்சி கேட்டது; வலிமையான கட்சியான அ.தி.மு.க. பூத்துக் குலுங்கும் மலர் போன்றது; மலராக அ.தி.மு.க. பூத்துக் குலுங்க கூட்டணிக் கட்சிகள் தேனீக்களாய் வரும்” என்று சேலம் வனவாசியில் நடந்த அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!
Similar News
News October 22, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 21, 2025
பால் நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் வேலுச்சாமி அறிக்கையில்; நாளை அக்.22ம் தேதி புதன்கிழமை தமிழக முழுவதும் பால் நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தொடர் மழையின் காரணமாக, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். பொதுக்குழு கூடி அடுத்த போராட்ட தேதி அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.
News October 21, 2025
சேலத்தில் டாஸ்மாக் வசூல் இவ்வளவா!

தீபாவளிக்கு மண்டல வாரியாக மது விற்பனை வசூல் விவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரூ.170.64 கோடியுடன் மதுரை மண்டலம் முதலிடத்தில் உள்ளது. சேலம் மாவட்டத்தை பொருத்தவரை அக்.18,19, 20 ஆகிய 3 நாள்களில் மாவட்டம் முழுவதும் அமோகமாக நடந்த வியாபாரத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.153.34 கோடி மது விற்பனை நடைபெற்றுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.