News January 22, 2025
கூடுதல் வாடகை: புகார் தெரிவிக்கலாம்

கடலூர் கலெக்டர் சிபி ஆதித்யா தலைமையில், விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பெல்ட் வகை அறுவடை எந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.2500 எனவும், டயர் வகை எந்திரங்களுக்கு ரூ.1,800 எனவும் வாடகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக வசூலிப்பவர்கள் மீது அப்பகுதி வேளாண் அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
Similar News
News September 16, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.15) இரவு 10 மணி முதல் இன்று (செப்.16) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News September 15, 2025
கடலூர்: சகலமும் அருளும் கோயில்!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோயில் 1229 மற்றும் 1278க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப் பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. காளிதேவி சிவபெருமானிடம் நாட்டிய போட்டியில் தோற்றபிறகு இங்கு சென்றார் என்று புராணக்கதை கூறுகிறது. இக்கோயிலில் அம்மன் 4 முகங்களுடன் காட்சி தருவது சிறப்பாகும். இக்கோயிலில் வழிபட்டால் சகல சௌபாக்கியம் கிடைக்கும், எதிரிகள் தொல்லை தீரும் என்பது நம்பிக்கை. இதை SHARE பண்ணுங்க.
News September 15, 2025
கடலூர் மக்களே… பட்டா, சிட்டா விபரங்களை அறிய எளிய வழி!

கடலூர் மக்களே…உங்களது நிலம் தொடர்பான ஆவணங்கள் குறித்து<