News May 7, 2025
கூடலூர் முதியவருக்கு ஆயுள் தண்டனை

2023 அக்டோபர் 18-ஆம் தேதி கூடலூரை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த முதியவர் பாலில் துன்புறுத்த அளித்தாக போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட முதியவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும், அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News September 19, 2025
நீலகிரி: ஆட்கொல்லி யானைக்கு ரேடியோ காலர் பொருத்த தயார்

கூடலூர் ஓவேலி வனப்பகுதியில், மனித-யானை மோதலை ஏற்படுத்தி வரும் யானையைப் பிடிக்க, சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 60-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள், நான்கு கும்கி யானைகள் மற்றும் ட்ரோன் கேமரா உதவியுடன் யானையைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பிடிக்கப்படும் யானைக்கு பொருத்துவதற்காக ரேடியோ காலரும் தயார் நிலையில் உள்ளது.
News September 19, 2025
நீலகிரி: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி, பந்தலூர் மற்றும் குந்தா ஆகிய ஆறு உட்கோட்டங்களிலும் இன்று (18.09.2025) இரவு ரோந்துப் பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் குறித்து நீலகிரி மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. ஏதேனும் உதவி தேவைப்பட்டால், நீங்கள் நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரியைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 100 என்ற எண்ணை அழைக்கலாம்.
News September 18, 2025
நீலகிரியில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

நீலகிரி மாவட்டத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் கூடலூர் வட்டம் நெல்லியாலம் பகுதிக்கு நாளை (செப்.19) பாரிஸ் ஹாலில் முகாம் நடைபெறுகிறது. சேரங்கோடு ஊராட்சிக்கு அய்யன்கொல்லி சர்ச் ஹாலிலும், ஊட்டி வட்டம் தூனேரி கிராம ஊராட்சிக்கு அணிக்குகோரை சமுதாயக்கூடத்திலும் முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை அந்தந்த முகாம்களில் அளிக்கலாம்.