News December 5, 2024
கூடலூர் பகுதியில் டெலிபோன் டவரில் டீசல் திருட்டு

கூடலூர், நாடுகானி குடோன் பகுதியில், தனியார் நிறுவனத்தின் டெலிபோன் டவர் உள்ளது. அங்கு கடந்த டிசம்பர் 1 தேதியன்று, இருவர் டீசல் திருடியது CCTV Camera வில் பதிவாகியது. அந்த டீசல் திருட்டில் ஜீப் டிரைவர் சத்யராஜ் மற்றும் ராஜூ ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து தேவாலா போலீசார் இருவரையும் தேடிவருகின்றனர். ஜீப் , டீசல் கேன்கள், மற்றும் சில பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Similar News
News July 8, 2025
மாவட்ட ஆட்சியரிடம் குவிந்த 201 மனுக்கள்

ஊட்டியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பட்டா, கல்வி உதவித்தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 201 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
News July 8, 2025
நீலகிரி: மலை ரயில் இயக்கம் நீட்டிப்பு

குன்னூர் – ஊட்டி இடையே தினமும் தலா 4 முறையும், ஊட்டி – மேட்டுப்பாளையம் இடையே தலா ஒரு முறையும் மலை ரயில் இயக்க பட்டு வருகிறது. இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு மார்ச் 28 முதல் ஜூலை 7 வரை வெள்ளி முதல் திங்கள் வரையும் இயக்கப்பட்டு வந்தன. தற்போது ரயில் பயணத்தில் மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் ஆக.18 வரை இதை நீட்டித்துள்ளனர்.
News July 8, 2025
BE படித்தவர்களுக்கு அரசு வேலை!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 1,910 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, ஐடிஐ, இன்ஜினியரிங், டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக ரூ.18,000 முதல் ரூ.67,100 வரை வழங்கப்படும். இதற்கான தேர்வு நீலகிரியில் வரும் 31ஆம் தேதி நடைபெறும். <