News March 28, 2025
கூடலூரில் 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஆய்வு

மேலக் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மாலையம்மன் கோவில். இந்தக் கோவிலில் வீரன் ஒருவன் வில்லுடன் அம்பைப் பிடித்து எய்த வண்ணம் உள்ள 300 ஆண்டுகள் பழமையான நடுகல் ஒன்று உள்ளது. வரலாற்றைச் சுமந்து நிற்கும் இந்த நடு கல்லை நேற்று மார்ச் 27 பிற்பகல் தேனி மாவட்ட வரலாற்று ஆய்வு குழுவினர் ஆய்வு செய்தனர்.
Similar News
News November 23, 2025
தேனி அருகே துப்பாக்கியுடன் மோதல்

பாலாா்பட்டி பகுதியை சோ்ந்தவா் மணவாளன். இவருக்கும் இவரது வீட்டை அடுத்துள்ள சத்தியாவுக்கும் இடப் பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் அந்த இடத்தை நில அளவை செய்வதற்காக நில அளவையா், கிராம நிா்வாக அலுவலா் ஆகியோா் நேற்று முன்தினம் சென்றனா். அப்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதில் சத்யாவின் உறவினரான ரவி என்பவர் கை துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். இருதரப்பு புகாரில் 8 பேர் கைது.
News November 23, 2025
தேனி: VOTER லிஸ்டில் உங்க பெயர் இருக்கா.? செக் பண்ணுங்க.!

தேனி மாவட்டம் தொடர்பான 2002 வாக்காளர் விபரங்களை மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த https://theni-electors.vercel.app/இணையதளம் வாயிலாக, உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என SEARCH செய்து தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்சித் சிங், தெரிவித்துள்ளார். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News November 23, 2025
தேனி: மூவர் குண்டாசில் கைது – ஆட்சியர் அதிரடி

தேனி மதுவிலக்கு போலீசார் கடந்த மாதம் கஞ்சா கடத்திய வழக்கில் சாய் (41) என்பவரை கைது செய்தனர். பெரியகுளம் பகுதியை சேர்ந்த ஜெயபால் என்பவரை கடந்த மாதம் கொலை செய்த வழக்கில் போலீசார் மருதமுத்து (23), முத்துப்பாண்டி (21) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மூவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது எஸ்.பி பரிந்துரை செய்த நிலையில் மூவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரஞ்ஜீத்சிங் உத்தரவிட்டுள்ளார்.


