News October 27, 2024

கூகுள் மேப்பில் விஜய் மாநாடு இடம்

image

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு இன்று மாலை விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. மேலும் மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் அனைவரும் வழி தெரியாமல் இருக்கக் கூடாது என்பதற்காக கூகுள் மேப்பில் மாநாடு நடைபெறும் இடம் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘விஜய் மாநாடு’ என்று போட்டாலே போதும். ட்ரை பண்ணி பாருங்க 

Similar News

News November 20, 2024

நாட்டு துப்பாக்கிகள் வைத்திருந்த 3 பேர் கைது

image

திண்டிவனம் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான பிரகாஷ் தமிழரசன், ஜெமினி, மூன்று நரிக்குற இளைஞர்களை கைது செய்து அவரிடம் இருந்த மூன்று நாட்டு துப்பாக்கி, 28 நாட்டு வெடிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், எட்டு கத்திகள், இரண்டு கிலோ ஒயர்கள், வனவிலங்குகளுக்கு தரப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

News November 20, 2024

பைக் மீது லாரி மோதி விபத்து: இளைஞர் பலி

image

விக்கிரவாண்டி அருகே உள்ள பாப்பனப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராகுல், மணிகண்டன், விஷ்வா மூவரும், நேற்று ஒரே பைக்கில் அழுக்கு பாலம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த லாரி ஒன்று பைக் மீது மோதியது. இதில் மூவரும் படுகாயமடைந்தனர். அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ராகுல் உயிரிழந்தார். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 20, 2024

விழுப்புரம் வழியாக சபரிமலைக்கு ரயில் சேவை

image

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக, விழுப்புரம் வழியாக சபரிமலை செல்வதற்காக கொல்லம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16101) ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது, தினசரி இரவு 7.20 மணிக்கு விழுப்புரத்திற்கு வருகிறது. மறுநாள் காலை 6 மணிக்கு புனலூர் வழியாக கொல்லம் செல்கிறது. புனலூரில் இருந்து சபரிமலை செல்வதற்கு ஏராளமான பேருந்து வசதிகள் இருக்கின்றன. ஐயப்ப பக்தர்கள் இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.