News January 23, 2025
குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த குவாரி உரிமையாளர் ராமையா புதுக்கோட்டை நமனமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமயத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்குவதாக தொடர்ந்து புகார் அளித்த ஜகுபர் அலியை லாரி ஏற்றி கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் ராமையா இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
Similar News
News December 30, 2025
புதுகை: உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்!

புதுகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டய படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை பெற நாளை கடைசி நாளாகும். முதுகலை பாலிடெக்னிக் போன்ற படிப்பு பயிலும் முன்றாண்டு இளங்கலை மாணவ மாணவியர்களுக்கு எவ்வித நிபந்தனை இன்றி கல்வியில் உதவி தொகை பெற www.://umis.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
புதுகை: கோழி கொட்டகை அமைக்க 100% மானியம்

புதுகை, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த MGNREGA திட்டத்தின் கீழ், கோழிக் கொட்டகை 100 % மானியத்துடன் கட்டித் தரப்படுகிறது. இதில் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இதில் பயன்பெற விரும்புவோர் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அணுகலாம்.
News December 30, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் தகவல்!

புதுகை மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் இதுவரை 28 முகாம்கள் நடந்துள்ளன. சராசரியாக ஒரு முகாமிற்கு 1400 பேர் பயனடைந்துள்ளனர். இம் முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை, சிறுநீர் செயல்பாடு, பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 17 சிறப்பு சிகிச்சை பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை மாவட்டத்தில் 40,888 பயன் அடைந்ததாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.


