News April 14, 2025
குவாரி அமைக்க விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் குவாரி குத்தகை கோரும் விண்ணப்பதாரர்கள் மற்றும் சுரங்க நிலுவை தொகை சான்றிதழ் (Mining Dues clearance Certificate) கோரும் விண்ணப்பதாரர்கள் வரும் 28-ஆம் தேதி முதல் mimas.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நேற்று (ஏப்.13) தெரிவித்துள்ளார். SHARE!
Similar News
News September 14, 2025
சிவகங்கை: டூவீலரால் தம்பியை கொன்ற அண்ணன்

திருப்புவனம் அருகே மஞ்சகுடி பாலகிருஷ்ணன் மகன்கள் தர்மேந்திரன் 34, தயாளன் 25, இருவரும் அருகருகே வீடுகளில் வசிக்கின்றனர். தர்மேந்திரனின் டூவீலரை தயாளன் கேட்காமல் மதுரைக்கு எடுத்துச் சென்றதால் தம்பி தயாளனை கண்டித்துள்ளார். ஆத்திரத்தில் தயாளன் கடப்பாரையை எடுத்து டூவீலரை சேதப்படுத்தியுள்ளார். ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து தம்பி தயாளனை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News September 13, 2025
சிவகங்கை: ரிசர்வ் வங்கி வேலை விண்ணப்பிப்பது எப்படி?

▶️சிவகங்கை மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!
News September 13, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கல்

கல்லல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் இன்று (13.9.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திசிதம்பரம் முன்னிலையில் அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.