News September 14, 2024
குழித்துறை நகராட்சியில் ஓணம் சிறப்பு நிகழ்ச்சி

கேரளாவின் பாரம்பரிய பண்டிகையான ஓணம் பண்டிகை குமரி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் பொன் ஆசைத்தம்பி தலைமையில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சிகள் இன்று (செப்.13) சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
Similar News
News December 10, 2025
குமரி மாவட்டத்தில் 51 போக்சோ வழக்குகள்

குமரி மாவட்டத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் முன்னுரிமை கொடுத்து செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு மட்டும் 51 போக்சோ வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
குமரி: சொத்து தகராறில் தம்பியின் உதட்டை கடித்த அண்ணன்

மஞ்சாலுமூடு விஜயகுமார் (50). இவரது தம்பி சுனில் குமார் (42) தொழிலாளர்களான இருவருக்கும் இடையே சொத்து பிரச்சனையில் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் டிச.8ம் தேதி உத்தரகோணம் பகுதியில் வைத்து விஜயகுமார், சுனில் குமாரை தாக்கியுள்ளார். பின் விஜயகுமார், சுனில் குமார் உதட்டை கடித்து இழுத்தார். இதில் காயமடைந்த சுனில்குமார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அருமனை போலீசார் வழக்குப்பதிவு.
News December 10, 2025
குமரி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

குமரி மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <


