News February 28, 2025
குழந்தை பாலினம் விவகாரம்- 9 பேர் சஸ்பெண்ட்

சேலம் வீராணம் பகுதியில் உள்ள பசுபதி ஸ்கேன் சென்டரில் குழந்தை பாலினம் தெரிவிக்க தலா ரூ.15,000 வசூல்.புகாரின்பேரில் ஸ்கேன் சென்டரில் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். குழந்தை ஆணா, பெண்ணா என தெரிவித்து வந்த அரசு மருத்துவர் முத்தமிழ்,செவிலியர்கள் 6 பேர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்.ஸ்கேன் சென்டருக்கு சீல்- ஸ்கேன் சென்டரில் இருந்த இயந்திரங்களும் பறிமுதல்.
Similar News
News March 1, 2025
காலாவதியான PLI/RPLI பாலிசிகளைப் புதுப்பித்துலுக்கான சிறப்பு முகாம்!

காலாவதியான PLI/RPLI பாலிசிகளைப் புதுப்பித்தலுக்கான சிறப்பு முகாம் வரும் மார்ச் 01 முதல் மே 31 வரை அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது.பாலிசிகளை புதுப்பிக்கும் போது செலுத்த வேண்டிய தாமதக் கட்டணத்தில் 25% முதல் 30% தள்ளுபடியை அஞ்சல்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன் வேண்டுகோள்!
News March 1, 2025
சேலம் மாவட்டத்தில் மழை

தமிழகத்தில் கோடை காலம் துவங்கியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று காலை முதல் சில பகுதியில் லேசான சாரல் மற்றும் மிதமான மழை பெய்யது. கடந்த இரண்டு நாள்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், காலையில் பெய்த சாரல் மழையால் இப்பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.
News March 1, 2025
‘SAY NO TO DRUGS’ சேலம் போலீசார் பதிவு

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பிப்ரவரி 28 ‘SAY NO TO DRUGS’ என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் ஷேர் செய்யவும்.