News April 20, 2025
குழந்தை பாக்கியம் அருளும் ரத்தனகிரி பாலமுருகன் கோவில்

ராணிப்பேட்டை ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஒரு பழக்கம் உள்ளது. குழந்தை பாக்கியம் தரும் மிக புண்ணியமான தலமாக ரத்தினகிரி பாலமுருகன் கோவில் கருதப்படுவதால் முறைப்பெண்ணும், முறை மாப்பிள்ளையும் பொங்கலுக்கு மறுநாள் இங்கு வருவர். தங்கள் அன்பைப் பரிமாறிக் கொள்ளும் வகையில் தாங்கள் கொண்டு வரும் பூக்களை மாப்பிள்ளைகள் தங்கள் வருங்கால மனைவியருக்கு சூட்டுவர். இதனால் அன்னியோனியம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
Similar News
News December 9, 2025
ராணிப்பேட்டை ஆட்சியரின் வேண்டுகோள்!

நாட்டைக் காக்கும் படைவீரர்களின் நலனுக்காக கொடி நாள் நிதியை தாராளமாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ. யு. சந்திரகலா வேண்டுகோள் விடுத்துள்ளார். படைவீரர் கொடிநாள் 2025 நிதி சேகரிப்பை உண்டியல் மூலம் நிதி செலுத்தி தொடங்கி வைத்தார். வீரமரணமடைந்தவர்களின் குடும்பம், ஊனமுற்ற முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்ட 615 பேருக்கு ரூ. 1.19 கோடி மதிப்பிலான திருமண நிதி, கல்வி உதவி உள்ளிட்ட நலனுதவிகள் வழங்கப்பட்டது.
News December 9, 2025
ராணிப்பேட்டை மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News December 9, 2025
ராணிப்பேட்டை: லஞ்சம் கேட்டால், உடனே CALL!

ராணிப்பேட்டை மக்களே.., வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04172-299200) புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


