News March 21, 2025
குழந்தை பாக்கியம் அருளும் அங்காள பரமேசுவரியம்மன்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூர் அங்காள பரமேசுவரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான கோவிலாகும். குழந்தை பாக்கியம் வேண்டி இக்கோவிலில் வந்த வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதை பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதனால் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் பலர் அங்காள பரமேசுவரியம்மனை வழிபடுவர். ஷேர் பண்ணுங்க
Similar News
News March 25, 2025
3 ரூபங்களில் காட்சியளிக்கும் முருகன்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியம் திருத்தலத்தில் மாசி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இத்தலத்தில் மூலவர் முருகன், காலை பாலனாக, நண்பகல் வாலிபனாக, மாலை வயோதிகனாக காட்சி தருவது சிறப்பாகும். பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு அன்னதானம் பெற்றனர்.
News March 25, 2025
மகளுக்கு பாலியல் தொல்லை: தந்தைக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டையைச் சேர்ந்த முருகன் (41) என்பவர், தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2019ல் அவரது மனைவி போலீசில் புகார் அளித்தார். போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முருகன் மீது திருவள்ளூர் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, சிறப்பு நீதிபதி, முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
News March 25, 2025
திருவள்ளூர் மக்களே கண்டிப்பா இத பண்ணிடுங்க!

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.