News April 26, 2025
குழந்தை திருமணம் : திருச்சி காவல்துறை எச்சரிக்கை

குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு திருச்சி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் எந்தவொரு குற்றம் பற்றியும் புகார் தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அழைக்க கூறியுள்ளது. மேலும் குழந்தை திருமணத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News October 26, 2025
திருச்சி: இனி கேஸ் மானியம் பெறுவது ஈசி!

கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News October 26, 2025
திருச்சி: லஞ்ச வழக்கில் 2 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் கிரைய பத்திரத்தை விடுவிக்க ரூ.2500 லஞ்சம் பெற்ற, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி வந்த பெர்னத் ஐசக் என்பவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ரூ.1000 அபராதம் விதித்து திருச்சி ஊழல் தடுப்பு நீதிமன்ற நீதியரசர் புவியரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News October 26, 2025
திருச்சி: அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

தொட்டியம் அடுத்த சின்னபள்ளிபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன் (39) என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் முசிறி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 22-ம் தேதி அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மகிளா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டியனுக்கு வாழ்நாள் சிறை மற்றும் ரூ.20,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


