News April 27, 2025
குழந்தை திருமணத்திற்கு கடுங்காவல் – கலெக்டர் எச்சரிக்கை

குழந்தை திருமணங்கள் நடைபெறுவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அரசின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், குழந்தை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீதும், குழந்தை திருமணம் நடத்த தூண்டியவர்கள் மீதும் குழந்தை திருமண தடை சட்டத்தின்படி 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை, அல்லது ரூ.1 லட்சம், அல்லது தண்டனை மற்றும் அபராதம் இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும்.
Similar News
News November 19, 2025
தேனி: இலவச பயிற்சி வகுப்புகள் – ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள தொகுதி 2 மற்றும் 2A முதன்மைத் தேர்விற்கு தயராகும் விண்ணப்பதாரர்கள் நேரடி பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 63792 68661 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
News November 19, 2025
தேனி ராணுவத்தில் சேர வாய்ப்பு – கலெக்டர் தகவல்

தேனி: இந்திய ராணுவ பயிற்சி நிலையம் சார்பில் குளிர்கால ராணுவ விளையாட்டுகளின் ட்ரையல்ஸ் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகரில் நவ.25 – 29 வரை நடைபெறுகிறது. இதில் தேர்வாகும் நபர்கள் இந்திய ராணுவத்தில் நேரடியாக நைப் சுபேதார், அவில்தார் பதவி நிலைகளில் பணியாற்றலாம். மேலும் விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தகவல். ஷேர்பண்ணுங்க
News November 19, 2025
தேனி: பூச்சி கடித்ததில் முதியவர் உயிரிழப்பு

தேனி மாவட்டம், தாடிச்சேரி பகுதியை சேர்ந்தவர் சின்னச்சாமி (61). கடந்த வாரம் இவர் வீட்டில் இருக்கும் பொழுது விஷப்பூச்சி ஒன்று இவரை கடித்துள்ளது. இதனால் மயக்கம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சையில் இருந்து வந்த அவர் நேற்று (நவ.18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.


