News May 15, 2024

குழந்தை தத்து அளிக்க ஒப்படைக்கப்பட்டுள்ளது

image

ஆரணி பேருந்து நிலையத்தில் 29.5.2023 அன்று தனியாக அழுது கொண்டிருந்த யாழினி என்ற 2 வயது பெண் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நல குழுவில் தத்து வழங்க ஒப்படைக்கப்பட்டுள்ளது. இக்குழந்தையை உரிமம் கோருவார் எவரேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் ஏழு நாளுக்குள் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தை அணுகுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

41-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் துவக்க விழா

image

திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இன்று (நவ.21) மாநில அளவிலான 41-வது பாரதியார் தின குழு விளையாட்டு போட்டிகள் துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துக்கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும், துணை சபாநாயகர் பிச்சாண்டி,கலெக்டர் தர்ப்பகராஜ் எம்பி அண்ணாதுரை, உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டனர்.

News November 21, 2025

தி.மலை: 10th தகுதி;மத்திய அரசு வேலை ரெடி!

image

எய்ம்ஸ் (AIIMS) மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கு 1383 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18-40 வயதிற்கு உட்பட்ட 10, 12, டிப்ளமோ, டிகிரி, B.E., முடித்தவர்கள் டிச. 2-க்குள் <>இங்கு கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 – ரூ.1,51,100 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News November 21, 2025

தி.மலை: இலவச சிலிண்டர் + அடுப்பு வேண்டுமா?

image

உஜ்வாலா யோஜனா மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டு வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து இதற்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், ஹெச்.பி., பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!