News April 11, 2025
குழந்தை உயிரிழப்பு உறவினர்கள் சாலை மறியல்

அஞ்செட்டி, கடுகுநத்தத்தை சேர்ந்த சின்னதுரை – பிரீத்தா தம்பதியின் மகன் பிரசாந்த்,(4). மார்ச் 30ல், வீட்டு மாடி படிக்கட்டில் தவறி விழுந்ததில் குழந்தையின் தொடையில் அடிபட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று குழந்தை ஜன்னி வந்து இறந்ததாக கூறியுள்ளனர். 4 வயது குழந்தை இறப்புக்கு காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை கோரி, உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Similar News
News April 19, 2025
உலக காதலர்களை சேர்க்கும் கிருஷ்ணகிரி ரோஜா

கிருஷ்ணகிரி மாவட்டம் ரோஜா சாகுபடிக்கு புகழ் பெற்ற மாவட்டமாகும். தேன்கனிக்கோட்டை, தளி, பாகலூர் போன்ற பகுதிகளில் ரோஜாக்கள் பயிரிடப்படுகின்றன. இங்கிருந்து ரோஜாக்கள் ஒவ்வொரு ஆண்டும் காதலர் தின சமயத்தில் வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் தனித்துவம் கருதியே இதற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
கிருஷ்ணகிரி முக்கிய தொடர்பு எண்கள்

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு துறை அலுவலர்களின் தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் 04343239400, மாவட்ட வருவாய் அலுவலர் 04343231300, திட்ட அலுவலர் 04343239364, மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் 04343239030, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் 04343235655, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் 04343235591, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் 04343238777. ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
அரசு போக்குவரத்துறையில் வேலை.. கடைசி வாய்ப்பு

மாநில மற்றும் சேலம் போக்குவரத்து கழகத்தில் உள்ள 804 காலிப்பணியிடங்கள் நிறப்பட உள்ளன. அதன்படி 01.07.2025 தேதியின்படி, 24 வயது நிறைந்திருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத பேச தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் கட்டாயம். விருப்பமுள்ளவர்கள் <