News February 15, 2025

குழந்தை உயிரழப்பு: போலீசார் விசாரணை

image

சென்னிமலை யூனியன் ஈங்கூர் அடுத்த செங்குளம் பகுதியில் வசிக்கும் ராஜேஷ் குமார். இவரது மனைவி புவனேஸ்வரி ஆகியோருக்கு 18 மாத தக்ஷிதா உள்ளார். குழந்தையை உடல் நலம் சரியில்லாமல் ஆயுர் வேத சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டார். போலீசார் விசாரணை.

Similar News

News November 22, 2025

கோபி அருகே தேர்வு பயத்தால் மாணவர் தற்கொலை!

image

கோபி அருகே வேட்டைகாரன்கோவில் கிழக்கு கரடு வீதியில் வசிக்கும் ஞானசேகரன் குடும்பத்தில், பிளஸ்-1 கணினி அறிவியல் மாணவர் குரு அஸ்வின் (16) நேற்று வீட்டில் தற்கொலை செய்தார். தேர்வில் மதிப்பெண் குறைவாகும் பயத்தில் அவர் மின்விசிறி கம்பியில் தூக்குப்போட்டு இறந்துள்ளார். இதனால் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெரியவந்தவுடன் கோபி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News November 22, 2025

ஈரோட்டில் அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் காந்தி, நேரு பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி டிச.4, 5 ஆகிய தேதிகளில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2-வது பரிசாக ரூ.3,000, 3-வது பரிசாக ரூ.2,000 வழங்கப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

News November 22, 2025

சேலம் -ஈரோடு புதிய மின்சார ரயில் சேவை துவக்கம்

image

சேலம்- ஈரோடு புதிய மின்சார ரயில் சேவை துவங்கப்படுவதாக நேற்று ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. இந்த புதிய ரயில் சேவை நாளை மறுநாள் (நவ.24) இயக்கப்படும். சேலம்-ஈரோடு மின்சார பாசஞ்சர் ரயில் (66621) வாரத்திற்கு 6 நாட்கள் (வியாழன் தவிர) இயக்கப்படுகிறது. சேலத்தில் காலை 6.15 புறப்பட்டு, மகுடஞ்சாவடி 6.29க்கும், சங்ககிரி 6.49க்கும், காவேரி ஸ்டேஷனுக்கு 7.04க்கும் ஈரோட்டிற்கு காலை 7.25 மணிக்கு சென்றடைகிறது.

error: Content is protected !!