News November 17, 2024
குழந்தை இறப்பிற்கு காரணமான நிறுவனத்திற்கு சீல்
குன்றத்துாரில் இரு குழந்தைகள் இறப்புக்கு காரணமான, ‘யூனிக் பெஸ்ட் கன்ட்ரோல்’ நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், அதன் அலுவலகத்திற்கும் வேளாண் துறை அதிகாரிகள் ‘சீல்’ நேற்று வைத்துள்ளனர். பின்னர், “இம்மருந்துகளால் ஏற்படும் பாதிப்புகளை, வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். மருந்து வைக்கப்பட்டபின், வீட்டில் யாரும் தங்க வேண்டாம்” என அதிகாரிகள் கூறினர்.
Similar News
News November 19, 2024
தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய அனுமதி கோரி விண்ணப்பம்
தமிழ்நாட்டில் ரூ.1792 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பித்தது. ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3.55 லட்சம் சதுர அடியாக உள்ள கட்டுமான பகுதியை 4.79 லட்சம் சதுர அடியாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
News November 19, 2024
கஞ்சா விற்பனை செய்த 3 ரவுடிகள் கைது
பெரிய காஞ்சிபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி, போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெரிய காஞ்சிபுரம் பகுதியில் உள்ள செங்கழுநீரோடை வீதியைச் சேர்ந்த வசந்த் (28), காமராஜர் நகரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (28), சிகாமணி (30) ஆகிய 3 ரவுடிகளையும் பிடித்து, ரூ.15,000 மதிப்பிலான 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News November 19, 2024
விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் தேதி அறிவிப்பு
காஞ்சிபுரத்தில் நவம்பர் மாதத்திற்கான விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம், வரும் 22ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளதாக கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார். கலெக்டர் வளாக கூட்டரங்கில் நடைபெறும் இக்கூட்டத்தில், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை உள்ளிட்ட துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். எனவே, காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்தார்.