News April 12, 2024
குழந்தைக்கு பெயர் சூட்டிய திமுக வேட்பாளர்

சேலம், அயோத்தியாபட்டினம் ஒன்றியம் எம்.பாலப்பட்டி ஊராட்சி தேர்தல் பிரச்சாரத்தின் போது இந்தியா கூட்டணி சார்பில் சேலம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது குழந்தைக்கு பெயர் வைக்குமாறு பெற்றோர் கூறிய நிலையில், குழந்தைக்கு நல்ல தமிழ் பெயரான பெயர் தமிழ்செல்வன் என்று சூட்டினார்.
Similar News
News December 12, 2025
சேலத்தில் பெண்கள் உள்பட 7 பேர் அதிரடி கைது!

தர்மபுரியில் இருந்து காரில் யானை தந்தம் கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் பேரில், சேலம் கருப்பூர் சோதனை சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு காரில் இருந்து யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக தர்மபுரியைச் சேர்ந்த 3 பேர், சேலத்தைச் சேர்ந்த பெண் உள்பட 2 பேர், கள்ளக்குறிச்சி மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
News December 12, 2025
சேலம் திமுகவிலிருந்து திடீர் விலகல்!

இன்று சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே எருமப்பட்டி ஊராட்சி முன்னாள் கவுன்சிலர் செல்வம் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் திமுகவிலிருந்து விலகி மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ் முன்னிலையில் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். இதில் ஒன்றிய கழகச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனே இருந்தனர்.
News December 12, 2025
சேலம்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

சேலம்:சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் <


