News August 25, 2024
குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் பல்வேறு ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல்வேறு துறை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் என ஏராளமானோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்
Similar News
News December 17, 2025
மயிலாடுதுறை: சொந்த ஊரில் தொழில் தொடங்க வாய்ப்பு!

PMFME எனும் திட்டம் மூலம் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க அரசு சார்பில், ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை மானியம் வழங்கபடுகிறது. இதன் மூலம், இளைஞர்கள் உணவுப் பதப்படுத்துதல், ஊறுகாய் தயாரித்தல், எண்ணெய் மில் மற்றும் பால் பண்ணை அமைத்தல் போன்ற தொழில்களை தொடங்கலாம். இதற்கு உங்கள் அருகில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகம் அல்லது <
News December 17, 2025
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் ஆய்வு

மயிலாடுதுறை வட்டம் சித்தர்காடு பகுதியில் உள்ள, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக நெல் சேமிப்பு கிடங்கு வளாகத்தில் உள்ள, மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு, முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியர் ஸ்ரீகாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் தனி வட்டாட்சியர் முருகேசன் உடன் இருந்தார்
News December 17, 2025
மயிலாடுதுறை: காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் பதிவான கொடுங்குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளுக்கு தண்டனை கிடைக்கும் வகையில் சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் அதிகாரிகள் மற்றும் நீதிமன்ற அலுவல் புரிந்த காவல் ஆளிநர்களுக்கு பாராட்டு விழா மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் காவல் அதிகாரிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.


