News June 26, 2024
குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலம், மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) ரம்யா தேவி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 19, 2025
புதுகை மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

புதுகை மாவட்டத்தில் இதுவரை 23 நலம் காக்கும் முகாம்களில் 33,199 மருத்துவ பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். சராசரியாக ஒவ்வொரு முகாமிற்கும் 1400 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் பயனடைந்துள்ளனர். இன்னும் நடைபெறக்கூடிய இது போன்ற முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த சக்கரை அளவு, ரத்த கொதிப்பு, பல்வேறு சோதனைகளை செய்து கொண்டு தங்கள் உடல்நலத்தை பேண வேண்டும் என கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
News December 19, 2025
புதுகை: ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் கடன் உதவி

புதுகை மக்களே மின்சார ஆட்டோ வாங்க பொருளாதாரத்தில் பின்தங்கிய மகளிருக்கு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், கூட்டுறவு வங்கிகள் மூலமாக ரூ. 3 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் 1,000 பேருக்கு கடன் வழங்கப்படவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வாகன விலை விவர அறிக்கை, வருமானச் சான்று, ஆதார், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் உங்களுக்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகலாம்.
News December 19, 2025
புதுகை: மது போதையில் அட்டூழியம்!

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் கடைவீதி ஐஓபி ATM பகுதியில் கோபால் (41) என்பவர், நேற்று மது அருந்திவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாத்தூர் காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டு பிணையில் விடுவித்தனர்.


