News March 18, 2025
குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சரத்குமார்( 9). அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவர், அவரது நண்பருடன், அருகில் உள்ள குளத்தில் குளித்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற சரத்குமார் திடீரென நீரில் மூழ்கினார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார். ரிஷிவந்தியம் போலீஸ் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 19, 2025
போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 36 பேர் மீது வழக்குப்பதிவு

சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சாலையில் மைலம்பாறை அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் வீரன், கோவிந்தன் தலைமையிலான காவலர்கள் நேற்று வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது குடிபோதை, ஓட்டுநர் உரிமம் இல்லாதிரத்தல், அதி வேகம், ஹல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணியாதிருத்தல் உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்களில் ஈடுபட்ட, 36 பேர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர்.
News March 18, 2025
கள்ளக்குறிச்சியில் பெண்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு இன்று(மார்.18) பாலியல் வன்புணர்வு மற்றும் துன்புறுத்தலுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை உடனடியாக விசாரித்து நீதி வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ரீதா தலைமை தாங்கினார். இதில் மாதர் தேசிய சம்மேளனத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
News March 18, 2025
கள்ளக்குறிச்சி: தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் ஒத்திவைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 2024- 25 ஆம் நிதி ஆண்டிற்கான வருடாந்திர கணக்கு முடிக்கும் பணிகள் அதிகமாக இருப்பதால் வியாழக்கிழமைகள் தோறும் நடைபெறும் தேசிய அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் மார்ச் 20-ஆம் தேதி அன்று ஒத்திவைக்கப்பட்டு மார்ச் 27-ஆம் தேதி என்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.