News May 21, 2024
குளத்தில் செத்தும் மிதக்கும் மீன்களால் பரபரப்பு

திருப்பூர்-ஊத்துக்குளி சாலை சர்க்கார் பெரியபாளையம் பகுதியில் 440 ஏக்கர் பரப்பளவில் நஞ்சராயன் குளம் அமைந்துள்ளது. தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயமாக இது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்து வரக்கூடிய நிலையில் இன்று காலை நஞ்சராயன் குளத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News April 21, 2025
திருப்பூர்: அளவுக்கு அதிகமாக மது குடித்தவர் பலி!

திருப்பூர் வஞ்சிபாளையத்தை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சாமிநாதன் (38). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் சாமிநாதன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். நேற்று அளவுக்கு அதிகமாக மது குடித்த சாமிநாதன், திடீரென சுருண்டு விழுந்து பலியானார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News April 20, 2025
திருப்பூர்: வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்!

சோமனூர் ரகங்களுக்கு 15 சதவீதமும், பல்லடம், அவினாசி ரகங்களுக்கு 10 சதவீதம் என்று கூலி உயர்வு நிர்ணயம். பல்லடம் பகுதியில் ஜவுளி உற்பத்தியாளர்கள் நாளை இதற்கான ஒப்பந்தத்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்ற உத்தரவாதத்துடன் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுகிறோம். நாளை சங்கத்தின் பொதுக்குழு கூட்டி, 2 நாட்களில் விசைத்தறிகளை இயக்குவோம் என உற்பத்தியாளர்கள் தகவல்.
News April 20, 2025
குழந்தை வரம் தரும் வீரக்குமார சுவாமி

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே பிரசித்தி பெற்ற வீரக்குமார சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக வீரக்குமார சுவாமி வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும், மேலும் தீராத நோய்கள், தொழில் மந்தம் போன்ற பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.