News April 2, 2025
குளத்தில் குளித்த +2 மாணவர் நீரில் மூழ்கி பலி

செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் திவாகர் (வயது-17) பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில் அங்குள்ள குளத்திற்கு இன்று நண்பர்களுடன் காலை குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கினார். நண்பர்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மூலக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 22, 2025
நெல்லை: கூட்டு பட்டாவை மாற்ற எளிய வழி.!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்து மாற்ற இங்கு க்ளிக் செய்து பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்தல் தேர்ந்தெடுத்து தனி பட்டாவாக மாற்ற பின்வரும் ஆவணங்களை இணைக்க வேண்டும்.
1.கூட்டு பட்டா,
2.விற்பனை சான்றிதழ்,
3.நில வரைபடம்,
4.சொத்து வரி ரசீது,
5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE.
News November 22, 2025
நெல்லையில் கனமழை தொடரும்.!

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இன்று (நவ.22) மற்றும் நாளை (நவ.23) ஆகிய தினங்களில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News November 22, 2025
நெல்லை: போன் தொலைந்து விட்டதா..நோ டென்ஷன்..!

திருநெல்வேலி மக்களே..! உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை <


