News November 4, 2024
குளச்சலில் மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாஜி கவுன்சிலர்
குளச்சலில் நேற்று (அக்.4) மாலை இடி மின்னலுடன் கனமழை பெய்தது. காமராஜர் சாலையில் மின்னல் தாக்கியதில் வீட்டிலிருந்த குளச்சல் நகராட்சி Ex.கவுன்சிலர் சதீஷ் பாரதி கட்டிலில் இருந்து தூக்கி வீசப்பட்டார். அவரது இடது கையில் படுகாயம் ஏற்பட்டது. வீட்டிலுள்ள டிவி உட்பட மின்சார சாதனங்கள் நாசமானது. அருகில் உள்ள முஸ்லிம் மதராசாவில் இருந்த இன்வெர்டர் பழுதடைந்தது. பல வீடுகளிலும் மின்சார பொருட்கள் பழுதாகி உள்ளது.
Similar News
News November 20, 2024
எழும்பூர் to நாகர்கோவில் ரயில் தாம்பரத்திலிருந்து..!
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(நவ.,21) முதல் மறு அறிவிப்பு வரும் வரை நாகர்கோவில் to எழும்பூர் வாராந்திர அதிவிரைவு ரயில் இரு மார்க்கங்களிலும் எழும்பூருக்கு பதிலாக, தாம்பரத்திலிருந்து இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயில் இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும், மறு மார்க்கத்தில் 22ஆம் தேதி மாலை 4:15 மணிக்கு புறப்படும். SHARE IT.
News November 20, 2024
கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்
#காலை 10 மணிக்கு கோழிவிளை சந்தியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்வதாக கூறியும், இதுவரை நடவடிக்கை எடுக்காததால் காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்களை கண்டித்தும் தொடர் உண்ணாவிரதம். #குமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் ஆபரேஷன் சி விஜி இன்றும் நாளையும்( 20, 21) ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. #உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவட்டார் தாலுகாவில் ஆட்சியர் ஆய்வு.
News November 20, 2024
குமரியில் மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம்
குமரி உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 3 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.