News May 9, 2024
குளச்சலில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து
குளச்சல் மின் விநியோகப் பிரிவிற்கு உட்பட்ட செம்பொன்விளை – குளச்சல் பீடரில் இன்று(மே 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாஸ்தான்கரை, அண்ணாசிலை, கள்ளியடைப்பு, சைமன்காலனி, கோடி முனை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கோடைக்காலத்தை ஒட்டி பொதுமக்களின் நலன் கருதி இன்றைய மின்தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 20, 2024
நெல்லை: மழை எச்சரிக்கை விடுத்த காவல்துறை!
குமரி மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு மழை எச்சரிக்கை இன்று விடுத்துள்ளது. அதில், மழைக்காலத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களில் பயணம் செய்யும்போது மெதுவாகவும், கவனமாகவும் செல்ல வேண்டும். தண்ணீர் சூழ்ந்த இடங்களில் சென்று செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும். மின்கம்பங்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெள்ளம் சம்மந்தப்பட்ட பொதுமக்களை பயமுறுத்தும் தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்.
News November 20, 2024
TV, PHONE-ல் பொழுதை போக்கக்கூடாது: கலெக்டர் அழகு மீனா
தமிழக முதல்வரின் ‘உங்களை தேடி உங்கள் ஊர்’ திட்டத்தின் படி இன்று, திருவட்டார் தாலுகா பகுதிகளில் குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா ஆய்வு மேற்கொள்கிறார். காலை 9 மணிக்கு திருவட்டார் உயர்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். அங்கு மாணவ மாணவிகளிடம் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், டி.வி, மொபைல் போன்ற கருவிகளில் பொழுதை போக்கக்கூடாது என அறிவுரை வழங்கினார். தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.
News November 20, 2024
குமரி தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீடு!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் சொந்த வீடற்ற தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களது நலன் மற்றும் பாதுகாப்பு கருதி, கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள குமாரபுரத்தில் 288 கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் தமிழக அரசால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.